பட மூலாதாரம், EPA
பிரசுரிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
ஸ்பெயினில் மாட்ரிட் நகருக்குத் தெற்கே இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காஸ்டில்லா-லா மஞ்சா பிராந்திய அரசின் செய்தித் தொடர்பாளர் எஸ்தர் படில்லா, இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய ரயில்களில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், EPA
எஸ்தர் படில்லா, டிவிஇ தொலைக்காட்சியிடம் பேசுகையில், இரயோ நிறுவனத்தால் இயக்கப்படும் ரயிலில் 146 பயணிகளும் ஒரு குழந்தையும் இருந்ததாகவும், ரென்ஃபே நிறுவனம் இயக்கிய ரயிலில் 397 பயணிகள் இருந்ததாகவும் தெரிவித்தார்.
“ரயில் விபத்து நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போக்குவரத்துத் துறை அமைச்சருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், EPA
மாட்ரிட் – செவில்லா வழித்தடத்தில் இயக்கப்படும் இரயோ நிறுவனத்தின் ரயிலுக்கும், ரென்ஃபே நிறுவனத்தின் மற்றொரு ரயிலுக்கும் இடையே இந்த விபத்து நிகழ்ந்ததாக ரயில்வே இயக்குநரான அடிஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தற்போது அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று ஸ்பெயின் அவசரகால சேவைகள் பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
பல தீயணைப்புப் படைக் குழுக்கள், மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் இரண்டு நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்டவை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


