நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டது. இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்றாலும், திமுக தனது வாக்கு வங்கியை 33 சதவீதம் அதிகரித்தும், மக்களிடம் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்று திமுகவினர் உற்சாகத்தில் இருந்தனர்.
திமுக இடைத்தேர்தல் ஆலோசனை
இதனைத் தொடர்ந்து மீதமுள்ள ஐந்து தொகுதிகளில் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அறிவாலயத்தில் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதிவாரியான தேர்தல் பணிகள் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்திற்கும் அதிமுகவுக்கும் எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.அப்போது திருச்சி கிழக்கு தொகுதி க்கு திமுக முன்னாள் அமைச்சர் நேருவும், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலர் கே கே செல்லபாண்டியின், கரூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் அவருடைய தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திமுக 5 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
மேலும் மதுராந்தக மற்றும் தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயேதிமுக தோல்வியை தழுவியது. அதனால் வரும் ஐந்து தொகுதி இடைத்தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முனைபுடன் திமுக இருப்பதாக கூறப்படுகிறது.
இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, தேர்தல் பணிகளில் திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதோடு, மாவட்ட செயலர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களின் ஒருங்கிணைப்பில் வலுப்படுத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு ஏற்பட்ட உள்ளது.
ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கட்சி தலைமைக்கு வேட்பாளர்களையும் பரிந்துரை செய்யதிமுக தலைமை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக அன்பில் மகேஷ் பொய்யா மொழியை நிறுத்த இருப்பதாக ட்விஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அன்பில் மகேஷ் கைது திமுகவுக்கு பின்னடைவா ?
அதேபோல் கரூர் தொகுதி அசோக்குமாருக்கும், விராலிமலை தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சி விஜயபாஸ்கர் அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவருக்கு எதிராக பலம் பொருந்திய திமுக வேட்பாளராக எம் .எம் .அப்துல்லா களம் இருக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் அம்பாசமுத்திரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் பெருந்துறை தொகுதிக்கு முத்துசாமி உள்ளிட்டோர் பெயர்கள் திமுக தலைமையிடம் பரிந்துரை செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஐந்து தொகுதி இடைத்தேர்தலை மையமாகக் கொண்டு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தீவிர தேர்தல் பணி மற்றும் ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சூழலில் நேற்று தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வாங்கி தருவதாக கூறி 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் தற்பொழுது அன்பு மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட உள்ளார் .மேலும் வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திமுகவினருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
தவெக மாஸ்டர் பிளான்
இந்த சூழலில் திமுக முன்னால் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை கையில் எடுத்து விசாரணையை தீவிரப்படுத்தி அக்கட்சியின் இடைத்தேர்தல் உபயோகத்தை கட்டுப்படுத்த தமிழக வெற்றிக்கழக திட்டமிட்டுள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.
Source link
