மாட்ரிட்: ஸ்பெயின் காட்டுத்தீயால் 16,000 ஹெக்டேர் வனப்பகுதி முற்றிலும் தீக்கிரையாகி உள்ளது. 1100க்கும் அதிகமானோர் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அல்மேரியாவில் உள்ள லாஸ் கல்லார்டோஸ் பகுதியில் அண்மையில் தீப்பற்றியது. இந்த தீ வனப்பகுதியில் வேகமாக பரவியது.
ஸ்பெயினில் இந்தாண்டின் மிக பெரிய காட்டுத்தீயால் சுமார் 16,000 ஹெக்டேர் பரப்பளவு உள்ள வனப்பகுதி முற்றிலும் தீக்கிரையாகி உள்ளது. கிட்டத்தட்ட 1100க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தீ விபத்தால் சரகோசா உள்ளிட்ட 5 நகராட்சிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் லூயிஸ் பியென்டிச்சோ கூறுகையில், ”காற்றின் திசையில் ஏற்படும் மாற்றம், அதிக வெப்பம் போன்ற காரணங்களினால் தீயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் உள்ளது. இருப்பினும், தீயை அணைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் இருக்கிறது’ என்றார்.
