ஹாங்காங்: ஹாங்காங் சூப்பர் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடர் இன்று முதல் நவ.,1ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 6 ஓவரைக் கொண்ட இந்தப் போட்டியில் ஓர் அணியில் 6 வீரர்கள் மட்டுமே இடம்பெறுவர். க்ருணல் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன், ராகுல் திரிபாதி, ஷஷாங்க் சிங், நிதிஷ் ரானா, ராகுல் தெவாடியா இடம் பிடித்துள்ளனர்.
சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹாங்காங்கின் மோங் காக் மைதனாத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றியுடன் தொடரை துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
