கால்பந்து உலகக் கோப்பை தொடரில், 6 சீசன்களில் விளையாடிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். அடுத்து, நடப்பு சீசனில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அறிமுகம் ஆகி, இந்த சாதனையை சமன் செய்ய உள்ளார்.
200ஆவது போட்டி: அர்ஜெண்டினாவுக்காக 200ஆவது போட்டியில் ஆடிய லினோனல் மெஸ்ஸி, அல்ஜிரியா அணிக்கு எதிராக எப்படி செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இத்தொடருக்கு முன், மெஸ்ஸிக்கு காலில் தசை பிடிப்பு பிரச்சினை இருந்தது. அதையும் தாண்டிதான் மெஸ்ஸி, தற்போது உலகக் கோப்பையில் ஆட வந்துள்ளார். 38 வயதாகும் அவர், முதல் போட்டியில், அதுவும் அர்ஜெண்டினாவுக்காக 200ஆவது போட்டியில் எப்படி விளையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
போட்டி நடைபெற்ற கன்ஸஸ் மைதானத்தில், பெரும்பாலான ரசிகர்கள் 10 எண் கொண்ட ஜெர்ஷியை அணிந்து, மெஸ்ஸிக்கு ஆதரவை வெளிப்படுத்தினார்கள். மொத்தம், 69.045 பார்வையாளர்கள் கூடியிருந்தனர்.
இந்நிலையில், மெஸ்ஸி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு, 17ஆவது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து அசத்தினார். அடுத்து, முதல் பாதியில் எந்த வீரராலும் கோல் அடிக்க முடியவில்லை. முதல் கோல் அடித்ததும், மெஸ்ஸி கண் கலங்கினார். மேலும், ரசிகர்கள் சிலரும் ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தினார்கள்.
பிறகு, முதல் பாதி ஆட்டத்தில் எந்த வீரரும் கோல் அடிக்கவில்லை. முதல் ஆதி ஆட்டம் முடிந்து, வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பியபோது மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாதி ஆட்டம் துவங்கிய நிலையில், 60ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி மற்றொரு கோலை அடித்தார். பிறகு, 72ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து, 38 வயதில் உலகக் கோப்பையில் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில், 16 கோல்களை அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார். ஜெர்மனி லெஜண்ட் வீரர் மிரோஸ்லோவ் கோல்ஸேவும் 16 கோல்களை அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். இவரது சாதனையை யாரும் நெருங்க முடியாத நிலைமை இருந்தது. இந்நிலையில், மெஸ்ஸி தற்போது ஹாட்ரிக் கோல் அடித்து, 16 கோல்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இனி ஒரு கோல் அடித்தாலும், கோல்ஸேவை பின்னுக்கு தள்ளிவிடுவார்.
மெஸ்ஸி, உலகக் கோப்பையில் முதல் கோலை அடித்ததுன் இதே நாளில்தான். 2006ஆம் ஆண்டில், ஜூன் 16ஆம் தேதி செர்பியா அணிக்கு எதிராக முதல் கோலை அடித்திருந்தார். தற்போது, அதே நாளில் ஹாட்ரிக் கோல் அடித்து, வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
முதல் போட்டியிலேயே மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்திருப்பதால், நடப்பு சீசனில் மெஸ்ஸி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மெஸ்ஸிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை தொடர் என்பதால், இவர் நடப்பு சீசனில், அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்து, தொடர்ச்சியாக இரண்டு முறை, உலகக் கோப்பை வென்றுகொடுத்த வீரராக மெஸ்ஸி இருக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதற்குமுன், கடந்த கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 3-3 என சமநிலை அடைந்து, பினால்டி ஷூட் முறையில் 4-2 என்ற கணக்கில் அர்ஜெண்டினா வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
