“ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு குற்றங்கள் நடக்கிறது” – மு.க.ஸ்டாலின் காட்டம்!

தவெக ஆட்சியில் தொடர்ச்சியாக கொலைகள் நடப்பதாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்… சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது. வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.

த.வெ.க. ஆட்சியில் ஃப்ரீ ரன் (Free Run) கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள். தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி 
சார்பில் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.