சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலை, புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்கள் என, பல திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி சமீபத்தில் சென்னை வந்தார். த.வெ.க., தலைவரும், முதல்வருமான விஜய் விமான நிலையம் சென்று, அவரை வரவேற்றதுடன், அவர் டில்லி திரும்பும் போதும் ஒரு மணி நேரம் காத்திருந்து அனுப்பி வைத்தார். விஜயின் இந்த உபசரிப்பு, பிரதமர் மோடியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
பிரதமரின் பாதுகாப்பிற்காக, எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் சென்னை வந்தனர். இவர்களில் சிலர், முதல்வர் விஜயுடன் பேசினர். ஒருசிலர், ‘செல்பி’யும் எடுத்தனர். முதல்வர் விஜயும், அந்த அதிகாரிகள் ஒவ்வொருவரின் பெயரையும், அவர்களின் ஊரையும் கேட்டு தெரிந்து கொண்டாராம். முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், ‘விஜயின் ஆங்கில உச்சரிப்பு நன்றாக உள்ளது’ என, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
‘தமிழக முதல்வர் விஜய் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். அத்துடன், ஹிந்தியில் பேசினால் புரிந்து கொள்கிறார்; ஓரளவிற்கு ஹிந்தியில் பதிலும் சொன்னார்’ என்கின்றனர், பிரதமருடன் சென்னை வந்த அதிகாரிகள். ‘ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்’ என, சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட அந்த முன்னாள் மத்திய அமைச்சர், ‘ஹிந்தியில் விஜய் சுமாராக பேசியதை ஏன் குறிப்பிடவில்லை?’ என, பிரதமரின் பாதுகாப்பிற்காக வந்த அதிகாரிகள் ஆச்சரியப்படுகின்றனர்.
