ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

சென்னை: கோயில் சொத்துகளை மீட்பது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தமிழக பட்ஜெட் ஆக.5ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அது குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அறநிலையத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் கட்டண தரிசனம் முறையில் மாற்றம் கொண்டு வரப்படுவது குறித்தும், கோயில் சொத்துகளை மீட்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கோயில் திருவிழாக்கள், தேரோட்டங்களின் போது பக்தர்களின் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Source link