₹300 கோடி பாலத்துக்கு ₹375 கோடியா? சென்னை மாநகராட்சி கணக்குகளை கிளறும் அரசு! மேயர் பிரியாவுக்கு செக்! – tamilnadu government orders review of chennai corporation projects

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் போது மிகப்பெரிய அறிவித்த 90 திட்டங்கள் மதிப்பை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2026 மற்றும் 2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது அதில் மாநகராட்சியின் மொத்த வரவு 7 கோடியே 717 கோடி ரூபாய் மொத்த செலவு 9000 319 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டது இதன் வாயிலாக மாநகராட்சி பட்ஜெட்டில் சுமார் 1622 கோடி ரூபாய் வரை நிதி பற்றாக்குறை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது அத்துடன் உலக வங்கி, ஜப்பான் வளர்ச்சி வங்கி உள்ளிட்டவற்றின் மூலம் 2000 கோடி ரூபாய் மாநகராட்சி பெற்றுள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட்

இதற்காக ஆண்டுக்கு 95.20% கோடி ரூபாய் வட்டியாக செலுத்துகிறது மேலும் கடந்த திமுக ஆட்சியின் மூலதன நிதி அளவுக்கு அதிகமாக செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணியாளர்களுக்கு சம்பளம் போட முடியாத அளவிற்கு மாநகராட்சி நிதி நெருக்கடியில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது எந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் என்பது மேயர் ப்ரியா 90 திட்டங்கள் அறிவித்தார்.

திமுக, அதிமுக ஆசை தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேறாது! தவெக MLA ஆர் எஸ் முருகன் அதிரடி பேட்டி

அந்த திட்டங்களின் மதிப்பீடு மறு ஆய்வு செய்ய தமிழக வெற்றிக் கழக தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நிலையில் மேயூர் பிரியா அறிவித்த திட்டங்கள் குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் கேட்டபோது மேயர் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும் மக்கள் சார்ந்த திட்டங்கள் எந்தவித சிக்கலும் இருக்காது. அதே சமயம் திமுக ஆட்சியில் பல பணிகளுக்கு கூடுதலாக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 300 கோடிக்கு மதிப்புள்ளான மேம்பாலம் கட்ட முடியும் என்றால் 375 கோடி ஒதுக்கி உள்ளனர்.

மேயர் பிரியா 90 திட்டங்கள்

அதனால் தான் 800 கோடி ரூபாய் மேலான ஒப்பந்த பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் மறுமதி பெய்து செய்யவும் தற்போதைய அரசு உத்தரவிட்டுள்ளது அதேபோல் மேயர் பிரியா அறிவித்த 100 பள்ளிகளுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரிண்டர் இயந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். தமிழக வெற்றிக்கழக ஆட்சி மாறியதும் 22.12 லட்சம் மதிப்பில் 100 பிரிண்டர் இயந்திரங்கள் வாங்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் 38 லட்சம் ரூபாய் வரை மிச்சமாகியுள்ளது.

அதேபோல் மேயர் பிரியா அறிவித்த பல திட்டங்கள் மதிப்பீடு கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது மேலும் மேயர் அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் அதே நேரம் ஒதுக்கப்படும் தொகை மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source link