10 வயது சிறுமிக்கு பித்தப்பை வெற்றிகரமாக அகற்றம்

துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கதிரேசன் என்பவரது மகளான 10 வயது சிறுமி வாந்தி மற்றும் மயக்கம் மஞ்சள்காமாலை நோயோடு மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மருத்துவமனையில் MRI-MRCP SCAN எடுக்கப்பட்டது.

அதில் கணையவீக்கம் மற்றும் பித்தபைக்கு செல்லக்கூடிய பாதையில் கசடுகள் தேங்கி அடைப்பு மேலும் மஞ்சள் காமாலை நோய் ஆகியவை கண்டறியப்பட்டது.குழந்தைகளுக்கு பித்தபாதையில் கல் மற்றும் கணைய பிரச்சனை ஏற்படுவது அரிதானது என்பதால் அதனை சரிசெய்ய இதுவரை சென்னை அரசு மருத்துவமனைக்கே குழந்தைகள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர் முத்துக்குமரன் மற்றும் குடல் மற்றும் இரைப்பை மருத்துவபிரிவு டாக்டர் சாய்ராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்றி சிகிச்சை அளித்தனர் தற்போது சிகிச்சை முடிந்து அந்த 10 வயது பெண் குழந்தை நன்றாக உள்ளது

குழந்தைகளுக்கு இந்த முறை சிகிச்சைசெய்வதில் தென் தமிழகத்திலயே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது 10 வயது சிறுமிக்கு லேப்ராஸ்கோபி மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பித்தப்பையை அகற்றி சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரை உறைவிட மருத்துவர் சைலேஷ் ஜெபமணி மற்றும் கண்காணிப்பாளர் பத்மநாபன் உள்ளிட்ட மருத்துவர்கள் பாராட்டினர்.

Source link