10 வயது மாற்றுத்திறனாளி ரசிகைக்கு சிம்ரன் செய்த நெகிழ்ச்சி செயல்!

நடிகை சிம்ரன் தற்போது ரஜினி நடிக்கும் தர்மன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த சூழலில் 10 வயது சிறுமிக்கு அவர் செய்துள்ள சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10வயது சிறுமியான நிஷா பிறக்கும் போதே ஒரு கை இழந்துள்ளார். ஆனால் நடனத்துடன் மீதான ஆர்வத்தால் அந்த கையுடனே தொடர்ந்து நடனமாடி சமூக வலைதளங்களில் அதை வெளியிட்டு வந்தார். 

அந்த வகையில் சிம்ரன் நடனமாடிய பாடலை அவரைப் போலே நடனமாடி பயிற்சி பெற்று வந்தார். இதனை கவனித்த தன்னார்வலர் ஆஷிக், சிம்ரனிடம் நிஷா குறித்து தெரிவித்துள்ளார். உடனே அவரை அழைத்து வர சொன்ன சிம்ரன் அவருடன் நடனமாடி மகிழ்ந்தார். அதோடு நிஷாவின் நீண்ட நாள் கனவான பள்ளிக்கு செல்ல சைக்கிள் தேவை என்பதை தெரிந்த சிம்ரன் அவருக்கு சைக்கிள் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். 

மேலும், கல்வியின் முக்கியத்துவத்தை நிஷாவிடம் எடுத்துரைதது முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் தனது கனவுகளையும் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் பின்தொடர வேண்டும் என்றும் ஊக்கமளித்தார். 

Source link