புதுடில்லி: கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்துள்ளது. ஆனால், ஒருவருக்கு கூட தண்டனை கிடைக்கவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
டில்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒருவருக்குக் கூட தண்டனை கிடைக்கவில்லை. யாரோ சிலர் அல்லது சில குழுக்கள் நமது கல்வி அமைப்பை சீரழிக்கின்றனர்.
இந்தியாவின் மதிப்புமிக்க சொத்தான லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. அரசு என்ன செய்கிறது. ஆனால்,ஒருவருக்கும் தண்டனை கிடைக்கவில்லை.
வினாத்தாள் கசிவால் 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இதற்காக தங்களது சேமிப்பு முழுவதையும் செலவு செய்துள்ளனர். இதனால் மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். கல்விக்காக பட்ஜெட்டில் 1.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்குகின்றனர்.உற்பத்தித்துறை, வேலைவாய்ப்புத்துறை, பொதுத்துறை நிறுவனங்களை சீரழிந்துவிட்டன. மத்திய கல்வி அமைச்சராக பிரதான்தோல்வி அடைந்துவிட்டார். வினாத்தாள் கசிவுக்கு தர்மேந்திர பிரதான் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறினார்.
