18 மாவட்டங்களுக்கு அலர்ட்-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்த சூழலில்,  தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் உருவாகியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.