19.34 லட்சத்தை கடந்த அண்ணாமலயின் We the leader … இயக்கத்தில் சேர்வது எப்படி? முழு விவரம் – annamalai we the leader app download guide details

அண்ணாமலை We the Leader இயக்கத்தை கடந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 19.34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ள நிலையில் தற்போது இந்த இயக்கத்தில் எவ்வாறு இணைவது குறித்தும், செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பாஜகவில் தமிழ்நாடு மாநிலத்தலைவராக இருந்த அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி We the leader இயக்கத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில், We the leader இயக்கத்தில் 19.34 லட்சத்தை கடந்துள்ளது. தொடர்ந்து உறுப்பினா் சோ்க்கை தொடா்கிறது. http://wetheleader.org என்ற இணையதளத்தில் தங்கள் பெயா், மொபைல் எண்ணை பதிவு செய்து பலா் உறுப்பினா்களாக இணைந்து வருகின்றனா். இதில் எவ்வாறு இணைத்துக்கொள்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

We the leader செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வழிமுறைகள்

முதலில் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் வீத லீடர்ஸ்(We the leader ) என டைப் செய்து செயலியை பதிவிறக்கம் செய்யவும். ஏற்கனவே வலைதளம் மூலம் இணைத்தவர்கள் சைனின் பட்டன் வழியாகவும் புதிதாக இணைபவர்கள். join பட்டன் வழியாகவும் நுழையலாம். இந்த இரண்டு நிலைகளிலும் மொபைல் நம்பர் பதிவு செய்தியை உறுதிப்படுத்தியதும். Verify பட்டனை அழுத்தவும் புதிதாக இணைபவர்கள் கூடுதலாக அடுத்து வரும் பக்கத்தில் தங்கள ின் பிறந்த தேதி , மாநிலம், சட்டமன்ற தொகுதி, போன்ற சுய விவரங்களையும் அளித்து Continue பட்டனை அழுத்தவும். இப்போது இனிஷியல் சர்வை பக்கமானது திறக்கும். அங்கு அடிமட்ட தலைவராக செயல்பட விருப்பமா, தலைமை துவப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமா, உள்ளாட்சித் தேர்தல் உட்பட பொதுத்தலைமை பொறுப்பை ஏற்க விருப்பமா, முன்பு தேர்தலில் போட்டியிட்டதுண்டா என நான்கு கேள்விகள் கேட்கப்படும். இவற்றுக்கு Yes or No என பதில் அளிக்கலாம். மத்தியில் இருக்கும் பிற்பட்டனை கிளிக் செய்து தவிர்க்கவும். அடுத்து வரும் கேள்விகளுக்கும் பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றால் மேலே வரும் skip all பட்டனை அழுத்தவும் . சர்வ முடிந்ததும் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலையின் வரவேற்பு காணொளி திரையில் தோன்றி இணைப்பு உறுதிப்படுத்தப்படும். அதன் பின் முகப்பு பக்கம் திறக்கும். இதில் இயக்கத்தின் நோக்கம் தலைவர்கள் எண்ணிக்கை நிகழ்வுகளின் காணொளி மற்றும் புகைப்படங்கள் போன்ற தகவல்கள் இருக்கும். இந்த செயலியில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. Even இந்த பகுதியில் நமது தலைவர்கள் அவர்கள் பகுதிகளில் நடத்தவருக்கும் நிகழ்ச்சிகளின் விவரங்கள் பதியப்பட்டு இருக்கும். உங்கள் பகுதியில் நிகழ்ச்சி நடத்த விரும்பினால் மேலே உள்ள பிளஸ் நிகழ்ச்சிக்கு, மேலே இருக்கும் கிரியேட் பட்டனை இதன் மூலம் உங்கள் நிகழ்ச்சிக்கான பதிவுகள் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்படும். அடுத்து உள்ள ரூல்ஸ் பகுதியில் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை முன்னெடுத்த நிகழ்வுகளின் காணொளி அல்லது புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருக்கும் . உங்களின் முன்னெடுப்பை பதிவிட மேலே உள்ள பிளஸ் பட்டனை அழுத்தி அடுத்து வரும் பக்கத்தில் காணொளி அல்லது புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும். பின் மேலே வலது பக்கம் உள்ள நெக்ஸ்ட் பட்டனை கிளிக் செய்து ,அடுத்து வரும் பக்கத்தில் நிகழ்ச்சி குறித்த தகவல் மற்றும் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து மேலே வலது பக்கம் உள்ள ஷேர் பட்டனை அழுத்தவும். இப்போது உங்கள் பதிவானது அப்ரூவலுக்காக அனுப்பப்பட்டிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட பின் அது நமது ரீலீஸ் பக்கத்தில் பகிரப்படும். அடுத்துள்ள ப்ரொபைல் பகுதியில் தங்களின் தனிநபர் அடையாள அட்டை சுய விவரங்கள் இருக்கும் இவற்றை சரிபார்க்கவும்.

Source link