கிளம்பினார் பாண்டி: பிக் பாஸ் 10 கிராண்ட் லான்ச் மேடையில் பிளாக் பாண்டியை பார்த்த ரசிகர்கள் அவ்வளவு சந்தோஷப்பட்டார்கள். தன் எதிர்காலத்திற்கு இந்த பிக் பாஸ் வாய்ப்பு பெரிதும் கை கொடுக்கும் என்கிற நம்பிக்கையுடன் வந்தார் அவர். லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க்கில் தோல்வி அடைந்ததும் மனம் தாங்காமல் அழுதார் பாண்டி.
இவ்வளவு சாஃப்ட்டான ஆளாக இருக்கீங்களே பாண்டி என பிக் பாஸ் பார்வையாளர்கள் பதறினார்கள். இரண்டு நாட்களில் நல்ல பெயர் எடுத்த பாண்டி அதே வேகத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டார் என கூறப்படுகிறது.
உடல்நலம் சரியாகி அவர் திரும்பி வர வேண்டும் என்பதே பிக் பாஸ் 10 நிகழ்ச்சியை பார்க்கும் பலரின் பிரார்த்தனையாக உள்ளது. இருப்பினும் பாண்டி திரும்பி வருவாரா இல்லை இரண்டு நாட்கள் அந்த வீட்டில் இருந்ததே போதும் என்று வராமல் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பிரசாந்த் வருவாரா?: இதற்கிடையே பாண்டிக்கு பதில் விமர்சகர் பிரசாந்தை அழைத்து வாங்க பிக் பாஸ். அந்த ஆளை 100 நாட்கள் அந்த வீட்டில் தங்க வைத்து என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பெரிய பிளான் போட்டு வைத்திருந்தால் நீங்கள் என்னவென்றால் மேடையிலேயே அவரை திருப்பி அனுப்பி வைத்து எங்களை ஏமாற்றம் அடைய செய்துவிட்டீர்கள் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
கேப்டன் vs முனியம்மா: பாண்டி கிளம்பியது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை வெளியான ப்ரொமோ வீடியோவில் சமையல் அறையில் பாண்டியை பார்க்க முடிந்தது. கூலாக இருக்கும் பாண்டியை இந்த முனியம்மா கடுப்பேற்ற அவரோ அன்சருக்கு தேவையான முட்டையை நான் போட்டுக் கொடுக்கிறேன், நீங்க போங்க என முனியம்மாவிடம் கத்தியிருக்கிறார். முனியம்மாவுக்கு கேப்டன் சாதிகாவை பிடிக்கவில்லை. சாதிகாவுக்கு முனியம்மா சும்மா சும்மா பேசிக் கொண்டே இருப்பது பிடிக்கவில்லை. அதனால் அவர்களுக்கு இடையே முட்டிக் கொள்கிறது.
உங்களை கேள்வி கேட்டால் நக்கலாக பேசுகிறீர்கள் என்று கேப்டன் சாதிகா முனியம்மாவிடம் சொன்னார். அதை பார்த்தவர்களோ, இந்த விஷயத்தில் நாங்கள் சாதிகா பக்கம். முனியம்மா வாயை திறந்தாலே எரிச்சலாக இருக்கிறது. சும்மா நை நைனு பேசுறார். நான் சொல்வதை நீ கேளுனு முனியம்மா ஆரம்பிக்க , நான் சொல்வதை தான் நீங்க கேட்கணும் என சாதிகா கத்தினார். உடனே தலைவராக இருக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்று குறை சொன்னார் முனியம்மா. லீடர் பதவிக்கு நீங்கள் லாயக்கே இல்லை என்றார் அவர்.
போதும் முனியம்மா: இந்த சீசன் துவங்கிய வேகத்தில் பார்வையாளர்களிடம் அதிகம் திட்டு வாங்கியிருக்கும் போட்டியாளர் யாரென்றால் அது முனியம்மா தான். அவரை லேடி வாட்டர்மெலன் என்றும், தர்பீஸ் 2.0 என்றும் மக்கள் கிண்டல் செய்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற உடனேயே சண்டையை ஆரம்பிக்க வேண்டும் என்று முனியம்மாவுக்கு ஸ்க்ரிப்ட் கொடுத்திருப்பார்களோ என்கிற சந்தேகம் வந்திருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
சாப்பிடும், தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரம் வாய்க்கு ரெஸ்ட்டே கொடுக்க மாட்டேன் என்கிறார் முனியம்மா. இந்த கொடுமையை இன்னும் எத்தனை நாட்கள் சகிக்கணுமோ தெரியவில்லையே என்று பார்வையாளர்கள் குமுற ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கிடையேகன்ஃபஷன் அறை கொண்ட பிக் பாஸ் 10 வேன் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
