தமிழக அரசியல் களத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் அனைத்தும் முக்கியக் கட்சிகளுக்கு ஒரு ‘வாழ்வா? சாவா?’ என்ற போராட்டமாகவே உருவெடுத்துள்ளன. இது சாதாரண இடைத்தேர்தல் போல இல்லாமல், ஒரு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு இணையான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்
கடந்த காலங்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்த அதிமுக, சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. எனவே, தான் ஏற்கனவே வெற்றி பெற்ற 2 தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றி, மக்களிடம் தனக்கு இன்னமும் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய மிகப்பெரிய கட்டாயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். மறுபுறம், ஆட்சியில் உள்ள தவெக தனது பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ளவும், 5 ஆண்டுகளைப் பயமின்றித் தொடரவும் 7 இடைத்தேர்தல்களிலும் வென்றாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. அதேபோல, திமுகவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியைக் கவிழ்க்கவும், பெரும்பான்மை பெறவிடாமல் தடுக்கவும் தீவிரமாக முயற்சி செய்துவருகிறது. குறிப்பாக இடைத்தேர்தல் அறிவித்த நாளில் இருந்து வேட்பாளர்கள் நியமனம், தேர்தல் பொறுப்பாளர் நியமனம் என அடுத்தடுத்து தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் தவெக அரசு செயல்படுத்த முன்னெடுத்து திட்டங்களுக்கு எதிராக பகீரங்க குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறது.
பழனிசாமி வியூகம் என்ன?
இச்சூழலில், விஜய் என்ற ஆட்சியின் பெரிய பிராண்டின் செல்வாக்கும், மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள நம்பிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இத்தகைய சூழலில் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகம் மற்றும் தாராபுர இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் . இதற்கு எடப்பாடி பழனிசாமி சில முக்கிய வியூகங்களைச் செயல்படுத்த வேண்டும். கடந்த தேர்தலில் தொடர் தோல்வியால், அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இப்படியான நிலையில் கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசல்களைச் சரிசெய்து, சி.வி. சண்முகம், எஸ்.பி. போன்ற மூத்த தலைவர்களையும், வன்னியர் சமுதாய முக்கியப் புள்ளிகளையும், பிரிந்து சென்றவர்களையும் ஜெயலலிதா பாணியில் மீண்டும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.
வன்னியர் வாக்கு வங்கியைப் பெற பாமகவின் ஆதரவைக் கோருவதுடன், அன்புமணி, சௌமியா போன்றவர்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தலாம்.
கிருஷ்ணசாமி, தேமுதிக மற்றும் சசிகலா உள்ளிட்டோரை ஒன்றாக இணைப்பதன் மூலம் அதிமுகவின் பலத்தை அதிகரிக்க முடியும்.
இத்தகைய பலமான நகர்வுகளை மேற்கொண்டால் மட்டுமே, அதிமுக தனது இழந்த செல்வாக்கை மீட்டு, வெற்றிக்கான வாய்ப்பையோ அல்லது இரண்டாவது இடத்தையோ உறுதி செய்ய முடியும். இது தவெகவிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மதுராந்தகம் -வன்னியர் சமுதாய வாக்குகள்
மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமுதாய வாக்குகள் கணிசமாக இருப்பதால், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் அன்பழகன் ஆகியோரைத் தேர்தல் பணியில் இறக்க வேண்டும் என அக்கட்சியின் நிர்வாகிகள் பலமாக எதிர்பார்க்கின்றனர். இதேபோன்று, தாராபுரம் தொகுதியிலும் தேர்தல் பணிகளை முன்னெடுக்க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வர வேண்டும் என்பது நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது.
ஆனால், இந்த இடைத்தேர்தல் பணிகளுக்காக முன்னாள் அமைச்சர்கள் எவரையும் எடப்பாடி பழனிசாமி இதுவரை அழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க செல்லும் குழுவிலும் அவர்களை சேர்க்கவில்லை. எடப்பாடி பழனிசாமி அழைக்காமல் தேர்தல் வேலை செய்வதில்லை என்பதில், மாஜிக்கள் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. மறுபுறம் தங்களை தவிர்த்தால், பழனிசாமிக்கு எதிராக களத்தில் இறங்கி வேலை செய்ய தயராக இருப்பதாக கூறப்படுகிறது.
Source link
