2 தொகுதி இடைத்தேர்தல்: தவெக vs அதிமுக..பிரசாரத்தில் EPS கேட்க வேண்டிய கேள்வி இதுதான்… – கோடீஸ்வரன் கணிப்பு – aiadmk tvk by election 2026 edappadi palaniswami campaign strategy kodeeswaran prediction

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கேட்க வேண்டிய கேள்வி குறித்து அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அதிமுக மீண்டும் இழந்த செல்வாக்கை மீண்டும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல தவெகவும் தனது பெரும்பான்மை பலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த வகையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் அதிமுகவில் இருந்து விலகிய தவெகவில் இணைந்த மரகதம் குமாரவேல் மற்றும் சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் அதிமுக சார்பில் இவர்களுக்கு இணையாக கணிதா சம்பத் மற்றும் பானுமதி உள்ளிட்டோர் வேட்பாளராக கலந்திருக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ,தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக எடப்பாடி என்ன மாதிரியான பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம் என்று அரசியல் விமர்சகரும் மூத்த பத்திரிகையாளர் மாநாடு கோடீஸ்வரன் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில் பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து அணுகாமல், இணக்க சக்தியாக இருந்து தவெக இந்த விவகாரங்களைக் கையாள்கிறது. எவ்விதப் புகாருமின்றி சட்டமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு, நாங்கள்தான் உண்மையான அதிமுக என்ற நோக்கில் செயல்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்.

முதுகில் குத்தும் துரோக அரசியல்

நேருக்கு நேர் எதிர்ப்பது தான் திமுக – அதிமுக .ஆனால் பழகிக் கொண்டே பின்னால் தாக்குவது துரோகம். தவெகவின் தற்போதைய நடவடிக்கை நகைக் கடை விளம்பரம் போன்றது.பழைய நகையை கொடுத்துவிட்டுப் புது நகை வாங்கிச் செல்லுங்கள் என்பது போல எம்.எல்.ஏ-க்களை ஈர்க்கிறது.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பதவியின் பலன்:

மூன்று அல்லது நான்கு மாதங்களில் கவர்னராகவா மாறப்போகிறார்கள்? அதே எம்.எல்.ஏ பதவிதான். ஆனால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ என்ற தகுதியைப் பெற்றால்தான் டெண்டர் எடுக்கவோ, ஆட்களை நியமிக்கவோ, வசூல் செய்யவோ முடியும் என்ற நோக்கத்தில் இத்தகைய கட்சித் தாவல்கள் நடைபெறுகின்றன. இது தொழில்நுட்ப ரீதியாக நடக்கும் ஒரு குதிரை பேரமே என்று கோடீஸ்வரன் கூறினார்.

இடைத்தேர்தல் மற்றும் வாக்கு வங்கி கணிப்பு

தொடர்ந்து பேசியவர்,இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்குச் சாதகமான சூழல் இருப்பதால் தவெகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கலாம்.60% வரை இருக்கும் வாக்குகளை அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் நோட்டா எனப் பல தரப்பும் பிரித்துக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

அதிமுக முன்வைக்க வேண்டிய பிரச்சார உத்திகள்

எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவினரும் தீவிரமாக வீடுகளுக்குச் சென்று,கட்சியை அழிக்கப் பார்க்கிறார்கள், நம்பவைத்து ஏமாற்றுகிறார்கள்” என்ற உண்மையை உரக்கப் பேச வேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப் பின் கட்சிக்கு உயிர் கொடுத்தது, ஜெயலலிதாவின் வழிநடத்தல் போன்ற வரலாற்று அம்சங்களையும், ரட்டை இலை சின்னத்தின் முக்கியத்துவத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பட்டினப்பாக்கம் மீனவர் கிராமங்களை அழித்துவிட்டு எம்.ஜி.ஆர் புகைப்படத்தைப் பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்விகளை எடுத்துக்காட்டுகளுடன் முன்வைக்க வேண்டும். சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றி வாக்களித்தது, ஆளுநரிடம் முறையிட்டது என அனைத்தும் நடந்த உண்மை. ஆனால், தவேக தலைவருக்கு இருக்கும் ரசிகர் மன்ற ஆதரவும், சமூக வலைதளங்களின் வைப் கலாச்சாரமும் உண்மையான அரசியல் விவாதங்களை மறைக்கச் செய்கிறது. ஆளுங்கட்சி மீதான அதிருப்தி மற்றும் அநீதிகளை உணர்ந்து வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்கிறார்களா அல்லது வெறுமனே ஈர்ப்பின் அடிப்படையில் வாக்களிக்கிறார்களா என்பதே இத்தேர்தலின் முக்கிய தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று கூறினார்.

Source link