தவெக பதவியேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது தேசிய அரசியல் தடம் பதிக்க முனைப்பு காட்டி வருகிறது. இதன் காரணமாக வட இந்தியாவில் அதிக அளவில் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்க வெற்றி பெற்றது விஜய்யின் தவெக. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுச் 100 நாட்களை நிறைவுசெய்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் நடிகர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்தி ஒரு விசித்திரமான, திட்டமிட்ட டிஜிட்டல் பிரச்சாரம் தீவிரமாகப் பரவி வருகிறது.பொதுவாக, ஒரு மாநிலக் கட்சியின் அரசியல் பரப்புரை என்பது அந்தந்த மாநில மக்களின் மொழி மற்றும் உள்ளூர் பிரச்சினைகளை மையமாக வைத்தே நகரும். ஆனால், தவெக தலைவர் விஜய்யை மையமாக வைத்து தற்போது சமூக வலைதளங்களில், குறிப்பாய் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ்களில் (YouTube முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் இந்த மரபுகளை முற்றிலுமாக உடைத்துள்ளன.
தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்கும் உத்தி
வழக்கமான அரசியல் பிரச்சாரங்களைப் போல வெறும் தமிழ் பேசும் வாக்காளர்களை மட்டும் குறிவைக்காமல், முற்றிலும் இந்தி, ஆங்கிலம் மற்றும் பிற பிராந்திய மொழிகளில் இந்தச் சிறு வீடியோக்கள் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களின் இணையப் பயனர்களைக் கவரும் வகையில் இவை பகிரப்படுகின்றன. இதுதிராவிட கட்சிகளுக்கு கடும் சவாலாக உள்ளது. குறிப்பாக பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் தங்களுடைய கருத்துகளையும், எதிர்ப்புகளையும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் மூலம் கூறி வந்தது. ஆனால், இளைஞர்கள் மற்றும்Gen-Z வாக்காளர்களின் கவனம் முழுவதும் சமூகவலைத்தங்களை நோக்கி உள்ளது. வடமாநிலங்களிலும் சரி, தமிழகத்திலும் சரி, சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தும் இளம் வாக்காளர்கள் சினிமா பாணி எடிட்டிங் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள் இதன் மூலம் ஒரு பிராந்திய கட்சியின் தலைவர் என்பதைத் தாண்டி, நாடு தழுவிய அளவில் அனைத்து மாநில மக்களாலும் அறியப்படும் ஒரு தேசியத் தலைவராக விஜய்யின் பிம்பத்தைக் கட்டமைப்பதே இந்த வீடியோக்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.
திரைப்பட பாணி வடிவமைப்பு
முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகத் திறன், அரசு உத்தரவுகள் மற்றும் கொள்கை முடிவுகள் குறித்து இந்த ரீல்ஸ்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன: வேகமான எடிட்டிங், கம்பீரமான பின்னணி இசை மற்றும் சினிமா பாணி குரல் பதிவுகள் (Voice-overs) பயன்படுத்தப்படுகின்றன. விஜய் ஒரு சமரசமற்ற, ஊழலற்ற மற்றும் அதிரடி முடிவுகளை எடுக்கும் இரும்பு மனிதராகச் சித்தரிக்கப்படுகிறார். நாட்டின் முன்னணி தேசியத் தலைவர்களுக்கு இணையான ஒரு மாற்றுத் தலைவராக அவரை முன்னிறுத்தும் வகையில் இந்த உள்ளடக்கம் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைக்கும் திட்டம்
தமிழகத்தின் ஒரு திரைப்பட நட்சத்திரம் என்ற வட்டத்தைத் தாண்டி, டெல்லி அதிகார மையத்தில் கவனிக்கப்படும் ஒரு தேசிய அரசியல் சக்தியாக விஜய்யை நிலைநிறுத்த தவெக திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் 2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தேசிய அரசியலில் வலுவான இடத்தைப் பிடிப்பதற்கான தொடக்கப் புள்ளியாகவே இந்த டிஜிட்டல் பிரச்சாரங்கள் பார்க்கப்படுகின்றன.
தேசிய அரசியலில் விஜய்க்கு காத்திருக்கும் சவால் என்ன?
விஜய்க்கு தமிழகத்தில் இருக்கும் ரசிகர் மற்றும் கட்சி ஆதரவு, பிற மாநிலங்களில் அதே அளவில் அரசியல் வாக்குகளாக மாறுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. பிற மாநிலங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள், வாக்குச்சாவடி அமைப்பு என வலுவான கட்சி கட்டமைப்பை உருவாக்க வேண்டியிருக்கும். இந்திய மாநிலங்களில் மொழி, பிராந்திய அரசியல், உள்ளூர் தலைவர்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிப்பதால், விஜய்யின் அரசியல் செய்தியை அங்கு கொண்டு சேர்ப்பது சவாலாக இருக்கும். தேசிய அரசியலில் தனித்து போட்டியிடுவதா அல்லது பெரிய தேசிய/மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா என்பதை விஜய் தீர்மானிக்க வேண்டியிருக்கும். தமிழகப் பிரச்சினைகளைத் தாண்டி பொருளாதாரம், பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை, விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேசிய விவகாரங்களில் தெளிவான நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டியிருக்கும். தேசிய அரசியலுக்குள் விஜய் நகர்ந்தால், அவரது நிர்வாகம், கொள்கைகள், அரசியல் அனுபவம் உள்ளிட்டவை நாடு முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்படும்.
Source link
