2029-ம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா; செயல்திட்டம் தயார் – அமித்ஷா தகவல்

பனாஜி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கோவாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கோவாவின் தலைநகர் பனாஜியில் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, ‘போதைப்பொருள் இல்லா இளைஞர் சக்தி இந்தியாவை 2047-ல் வளர்ந்த பாரதமாக மாற்றும் என்பதே பிரதமர் மோடியின் உறுதிப்பாடு. 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆங்காங்கே சிறிய அளவில் நடந்து வந்தன. ஆனால் எங்கள் அரசு இந்த போராட்டத்தை தேசிய பாதுகாப்புக்கான முன்னுரிமையுடன் நடத்தி வருகிறது’ என்றார்.

மேலும் அவர், ‘நக்சல் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பணியாற்றியதுபோல போதைப்பொருளுக்கு எதிராகவும் அரசு செயல்படுகிறது. அந்த வகையில் 2029-க்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லா நாடாக மாற்றுவதற்கான செயல் திட்டத்தை மோடி அரசு தயாரித்து இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

Source link