2,250 கிலோ எடை, 1,500 கி.மீ கவரேஜ்: வெள்ளிக் கிழமை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் என்.வி.எஸ்-03 சாட்டிலைட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் அடுத்த தலைமுறை நேவிகேஷன் செயற்கைக் கோளான ‘என்.வி.எஸ்-03’ (NVS-03) செயற்கைக்கோளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதாக அறிவித்துள்ளது.

இந்திய பிராந்திய வழிகாட்டுதல் செயற்கைக்கோள் முறைமைக்கு (IRNSS) தடையின்றி சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட அடுத்த தலைமுறை நேவிகேஷன் செயற்கைக்கோள் வரிசையில், இந்த என்.வி.எஸ்-03 மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும்

ஆங்கிலத்தில் வாசிக்க

செயற்கைக்கோளின் சிறப்பம்சங்கள்:

இந்த என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளில் மற்ற அணுக்கடிகாரங்களுடன் இணைந்து செயல்படக்கூடிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அணுக்கடிகாரம் (Indigenous Atomic Clock) இடம்பெற்றுள்ளது.

இந்திய நிலப்பரப்பு முழுவதும் மற்றும் நாட்டின் புவிசார் எல்லையைத் தாண்டி 1,500 கி.மீ தொலைவு வரை பரவியுள்ள பகுதிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல் சிக்னல்களை இது வழங்கும்.  

இந்த செயற்கைக்கோள் சுமார் 2,250 கிலோ எடையைக் கொண்டது. இது ஜி.எஸ்.எல்.வி-எஃப்18 ராக்கெட் மூலம் புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதைக்கு (Geosynchronous Transfer Orbit) அனுப்பப்படவுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் ராக்கெட் முழுமையாகப் பொருத்தப்பட்டு, விண்ணில் பாய்வதற்குத் தயாராக உள்ளது. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் இது 20-வது விமானப் பயணம் ஆகும்.   

என்.வி.எஸ்-02 தோல்வியிலிருந்து பாடம்:

கடந்த ஜனவரி 2025-ல், ஜி.எஸ்.எல்.வி-எஃப்15 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ‘என்.வி.எஸ்-02’ செயற்கைக்கோள் விண்ணில் சுற்றுப்பாதையை உயர்த்தும் கட்டத்தின் போது தோல்வியைச் சந்தித்தது. எஞ்சினின் ஆக்ஸிஜனேற்றப் பாதையில் உள்ள பைரோ வால்வுக்கு (Pyro valve) இயக்க சிக்னல் சென்றடையாததே இந்தத் தோல்விக்குக் காரணம் என ஆராய்ந்து கண்டறியப்பட்டது.

இந்தச் குறைகளை அலசி ஆராய்ந்த உயர்மட்டக் குழுவின் (Apex Committee) பரிந்துரைப்படி, தேவையான திருத்த நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தற்போது என்.வி.எஸ்-03 ஏவப்படுவது குறிப்பிடத்தக்கது.

Source link