வாஷிங்டன்: எனது அதிபர் மூன்றாவது பதவிக்காலம் இன்னும் சிறப்பாக இருக்கும் என கிண்டலாகக் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘நான் சும்மா விளையாட்டாகச் சொல்கிறேன்’, என்றார்.
ஏப்ரல் மாத துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட செய்தியாளர் இரவு விருந்தில் பங்கேற்ற அதிபர் டிரம்ப் பேசியதாவது: எனது முதல் அதிபர் பதவிக்காலத்தைப் போலவே, இரண்டாவது முறை எப்போதும் சிறந்தது. மூன்றாவது முறை இன்னும் சிறப்பாக இருக்கும். நான் சும்மா விளையாட்டாகச் சொல்கிறேன்.
வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் குழு, எப்போதும் ஒரு தொடர் நடவடிக்கையைக் கொண்டிருக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
