3.70 லட்சம் மின் இணைப்புக்கு அதிக கட்டணம்: ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு

கடந்த ஜூலை மாதம் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக பல புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மின்வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்து மின்சாரத்துறையில் பல்வேறு பிரச்னைகள் எழுந்து வருகிறது. சென்னையில் பல பகுதிகளில், தொடர் மின் வெட்டுக்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், பல பகுதிகளில் மின்வெட்டை கண்டித்து மக்கள் போராட்டங்களில் குதித்தனர். அதேபோல் த.வெ.க அரசு பொறுப்பேற்ற முதல் நாளே, மக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. 

இந்த திட்டம் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு என்று அறிவிக்கப்பட்டதால், ஏற்கனவே இலவசமாக இருக்கும் 100 யூனிட் மின்சார திட்டம் செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கும் அரசின் சார்பில் விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது மின் கட்டணத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஜூலை மாதத்தில் 3.70 லட்சம் மின் இணைப்புகளுக்கு கூடுதல் மின் கட்டணம் பதிவு செய்யப்பட்டுள்ளது; 

இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த 3.70 லட்சம் மின் இணைப்புகள் மறு ஆய்வு செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் அருண்ராய், அனைத்து தலைமை மின் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான வட்டங்களுக்கு அனுபிய சுற்றறிக்கையில், ஜூலை மாதத்தில் அதிக மின் கட்டணம் வந்ததாக பரவலாக வந்த புகார்களைத் தொடர்ந்து, மூத்த அதிகாரிகளைக் கொண்டு மறு ஆய்வு செய்ய தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

முந்தைய மே மாத கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ஜூலையில் அதிக வேறுபாடு உள்ள 3.70 இலட்சம் மின் இணைப்புகளுக்கு மறு ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வுகள் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த ஆய்வின் போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் தேவையான திருத்தங்கள் உடனுக்குடன் செய்யப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார். மேலும், எந்த அதிகாரிகள் எவ்வளவு மின் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link