கம்பாலா: கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில், 15 ஆண்டுகளில், 38 பேரை கொடூரமாகக் கொலை செய்து, அவர்களின் மாமிசத்தை தின்றதாக, கொடூர சீரியல் கில்லர், கைது செய்யப்பட்டுள்ளார்.
முஜுரிசி மோசே என்ற அந்த நபர், 2010 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், உகாண்டாவின் மசாகா , இபந்தா மற்றும் காசோ ஆகிய மாவட்டங்களில் பல கொலைகளை அரங்கேற்றியுள்ளார்.
வீடுகளுக்குள் புகுந்து, அங்கிருப்போரை வெட்டிக் கொலை செய்வதையும், ஆசை வார்த்தைகளைக் கூறி வரவழைத்தும் கொலை செய்துள்ளார். பின்னர், அந்த உடல்களை சமைத்து சாப்பிட்டுள்ளார்.
பலமுறை கைது செய்யப்பட்டும் தப்பியோடிய முஜுரிசி மோசே, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக, உகாண்டா ராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
