40 ஆண்டுகளில் முதல் முறை… – ‘ஜெயிலர் 2 ‘ படக்குழு வெளியிட்ட வீடியோ!

நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 15ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர் 2’ படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோரும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 

இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஒரு கேங்க்ஸ்டர் படமாக அமைந்து வசூலையும் வாரி குவித்துள்ளது. முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 549 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதன் மூலம் முதல் வாரத்தில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படமாக இப்படம் சாதனை படைத்துள்ளது. வரும் வாரங்களில் வசூல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் ரஜினி ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்கும் வீடியோவை படத் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது அதில் ஐமேக்ஸ் திரையில் கடைசி வரிசையில் ரஜினி அமர்ந்து படம் பார்க்கிறார். அவருடன் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அவரின் பேரன்கள் உள்ளிட்டோரும் இருக்கின்றனர். இது போல் ரஜினி ரசிகர்களுடன் திரையரங்கில் படம் பார்ப்பது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For the first time in 40 years, Superstar Rajinikanth joins fans to witness #Jailer2 on the big screen!😎🔥#Jailer2 Industry Mega Blockbuster #Jailer2 Rampage in theatres worldwide @rajinikanth@Nelsondilpkumar@anirudhofficial@vidya_balan@iam_SJSuryah#MithunChakraborty… pic.twitter.com/1XWCnodqOp