திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது.
முந்தைய தேர்தலின் வெற்றி குறித்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் (Election Petitions) நிலுவையில் உள்ளதால், இடைத்தேர்தல் நடத்தத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பதில்களை ஆய்வு செய்த நீதிபதிகள், தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். இவ்வழக்கின் அனைத்துத் தரப்பு இறுதி விசாரணையும் வரும் 28-ஆம் தேதி தொடங்கும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
