நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது வரை இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2023-ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் 2-ம் பாகமாக வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம், நேற்று (அக்டோபர் 19) ஒருநாள் இந்தியாவில் மட்டும் தோராயமாக ரூ49.50 கோடி வசூலித்துள்ளதாக திரைப்பட வர்த்தக இணையதளமான ‘சாக்னில்க்’ (Sacnilk) தெரிவித்துள்ளது. இதன் மூலம், வெளியான 5 நாட்களில் இப்படத்தின் உலகளாவிய மொத்த வசூல் ரூ477.75 கோடியை எட்டியுள்ளது.
மேலும், 5 நாட்களில் உலகளவில் ரூ500 கோடியை நெருங்கியுள்ள நிலையில், படம் விரைவில் மற்றொரு மிகப்பெரிய வசூல் மைல்கல்லை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வசூல் ரூ234.25 கோடியும், வெளிநாட்டு வசூல் ரூ184 கோடியும் அடங்கும். இதே வேகம் தொடர்ந்தால், முதல் வாரத்திற்குள்ளேயே ரூ500 கோடி சாதனையை ‘ஜெயிலர் 2’ எளிதில் கடந்துவிடும்.
5-வது நாளான திங்கள் கிழமை ரூ49.50 கோடி வசூலித்ததன் மூலம் ஜெயிலர் 2 திரைப்படம், விஜயின் லியோ பட சாதனையை முறியடித்துள்ளது. லியோ படம் 5-வது நாள் திங்கள் கிழமை ரூ39.50 கோடி வசூலித்திருந்தது. இந்த படத்தில் 27.30 கோடியுடன் ஜெயிலர் 3-வது இடத்திலும், 22.80 கோடியுடன் பிகில் 4-வது இடத்திலும், 22.35 கோடியுடன் பொன்னியின் செல்வன் 1 5-வது இடத்திலும் உள்ளது.
தற்போதுவரை ஜெயிலர் 2 திரைப்படம் ரூ477 கோடி வசூலித்துள்ள நிலையில், அடுத்து வரும் பண்டிகை விடுமுறை நாட்கள் திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதால், பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் வந்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பையும், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.
