72-வது தேசிய விருது; 3 பிரிவுகளில் விருது வென்ற அமரன், சிறந்த படமாக தனுஷின் ராயன் தேர்வு

72-வது தேசிய திரைப்பட திரைப்பட விருதுகள், புது டெல்லியில் இன்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 1 முதல், டிசம்பர் 31, 2024 வரை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மூலம் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படுகிறது. திரைப்பட இயக்குனர் ஜெயராஜ் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு இந்த விருது தேர்வு பட்டியலை தயாரித்துள்ளது, 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

இந்த தேசிய விருது பட்டியலில், ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine As Light) மற்றும் ‘லாபாதா லேடீஸ்’ (Laapataa Ladies) போன்ற திரைப்படங்கள் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றதன் மூலம், இந்த பட்டியலில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், மலையாளத்தில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில் வெளியான ‘பிரமயுகம்’ திரைப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது, 

மேலும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் மீண்டும் அதே முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு, அல்லு அர்ஜுன் தேசிய விருதை வென்றிருந்தார். அதேபோல் ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியான ‘ஆடுஜீவிதம்: தி கோட் லைஃப்’ திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த கேரக்டருக்காக அவர் ஒரு மிகப்பெரிய உடல் மாற்றத்திற்கு உள்ளானார். அதேபோல், சாய் பல்லவி (‘அமரன்’) ‘மஞ்சுமெல் பாய்ஸ்’, ‘பிரேமலு’, ‘ஹனு மேன்’ போன்ற ஒப்பீட்டளவில் சிறிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. 

‘மெய்யழகன்’, ‘கொட்டுக்காளி’, ‘ஆவேசம்’, ‘கிஷ்கிந்தா காண்டம்’, ‘வாழை’ போன்ற திரைப்படங்கள் வெளியானபோது குறைவான பார்வையாளர்களையே கொண்டிருந்தன, ஆனால் பலத்த வாய்மொழிப் பாராட்டுக்கள் (Word of mouth) மூலம், அவை ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டத்தைச் சென்றடைந்து நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தின.

இதனிடையே 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில், கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்பத்திற்காக சிறப்பு விருதும், அந்த படத்தின் சவுண்ட் எஞ்சினியர் சுரேன் ஜிக்கு தேசிய விருது அறிவிக்க்பபட்டுள்ளது, அதேபோல் அமரன் படத்திற்கு சிறந்த இசை (ஜி.வி.பிரகாஷ்குமார்) சிறந்த இயக்குனர் (ராஜ்குமார் பெரியசாமி) ஆகிய பிரிவில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த சண்டைக் காட்சிக்கான விருது, விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த ‘மகாராஜா’ தமிழ்த் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனல் அரசு சண்டை காட்சிகள் அமைத்திருந்தார். 

தனுஷ் இயக்கி நடித்த அவரின் 50-வது ராயன் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமரன் படத்திற்கு சிறந்த எடிட்டர் (ஆர்.கலைவண்ணன்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link