8 பேர் தலித் அமைச்சர்களாக வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை – வன்னியரசு – it is a superstition to believe that everything will change if 8 people become dalit ministers. – vanniarasu

கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் அகிலனின் இல்லத்துக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த அவர் மாணவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார். இறுதி ஊர்வலத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, முதல்வர் வழிகாட்டுதலின்படி வந்து இருப்பதாக தெரிவித்தார்.

பள்ளிகளில் சாதிப்பெயர்களை நீக்குவோம்

பள்ளிகளில் நீண்ட காலமாக இருக்கின்ற சாதிய பாகுபாடுதொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை களைய எல்லா வேலையும் செய்ய வேண்டும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார். பள்ளிகளில் சாதிப்பெயர் இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியமானது, முதன்மையானது எனவும், அதை எடுப்பதற்கான முயற்சிகளை செய்வோம் என தெரிவித்தார்.

பள்ளி மாணவன் அகிலன்தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது, முழுமையான விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் இதில் யாரும் தப்பிக்க முடியாது என தெரிவித்தார். எவ்வளவு பெரிய சாதி பின்புலம் இருந்தாலும் சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால்

சிபிசிஐடி விசாரணை மூலம் அனைத்து சந்தேகங்களும், பிரச்சினைகளும் தீர்த்து வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் வன்னியரசு கூறினார். நான் அமைச்சராக இல்லை என்றால் இந்த போராட்ட களத்தில் இருப்பேன், போராட்டக் களம் என்பது நீதி பெறுவதற்கான இடம் எனவும் தெரிவித்தார். நான் அமைச்சரவையில் இருக்கிறேன், அமைச்சரவைக்குள் இருந்து என்னென்ன முடியுமோ அதை செய்கிறேன் என தெரிவித்த அவர், இதில் எந்த இடத்திலும் பின்னடைவு இல்லை, எஸ்சி எஸ்டி சட்டப்படி வேலை வாய்ப்பு பெறப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

எல்லா மாணவர்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் , பள்ளி, கல்லூரி வளாகங்களில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது முதன்மையானது என தெரிவித்தார்.

1000 ஆண்டுகளாக சாதிய கட்டமைப்பு

இந்த சமூக கட்டமைப்பு ஆயிரம் ஆண்டுகளாக சாதிகட்டமைப்பு என தெரிவித்த அமைச்சர் வன்னியரசு, 8 பேர் தலித் அமைச்சர்களாக வந்து விட்டோம் என்பதால் விடிவுகாலம் வந்துவிட்டது என நம்பவில்லை என்றார். இந்த சமூகம் சாதிய கட்டமைப்பு, சனாதான கட்டமைப்பு கொண்டது, அதை உடைக்க போராடி வருகின்றோம் என தெரிவித்தார். எட்டு பேர் தலித் அமைச்சர்களாக வந்து விட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை, போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது என தெரிவித்த அவர்,சாதிய அழுக்குகளை வேறறுக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றார்.

இந்துத்துவத்தை வேரறுக்க வேண்டிய தேவை இருக்கிறது, சாதிய பாகுபாடு களைகின்ற வரை சமூக விடுதலைக்காக போராட வேண்டியிருக்கிறது எனவும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்

Source link