-நமது நிருபர்-
தவெக
மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய நடிகர் விஜய், திமுக, அதிமுக, பாஜ
மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தார். எம்ஜிஆர் மீது வைக்கப்பட்ட அதே
விமர்சனத்தை தன் மீதும் வைப்பதாக கூறிய அவர், ‘பவள விழா பாப்பாவுக்கு பழைய
தகர டப்பாவை உருட்டத்தான் தெரியும்’ என்று கூறினார்.
விஜய்
பேசியதாவது: நமது கட்சியின் 3ம் ஆண்டு தொடக்க விழா. இன்றைக்கு தமிழகத்தில்
மிகப்பெரிய கட்சியாக வளர்ந்து இருக்கிறோம் என்றால், அது உங்களால் தான்.
நம்மை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களும் தான், அதுக்கு ஒரு மிக முக்கிய
காரணம். நீங்கள் எங்களுடைய மிகப்பெரிய பலம். உங்களை நம்பி தான் நானும்,
நமது கட்சியும் இருக்கிறோம்.
இதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய
வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
கட்சியினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மைக்கை பிடித்தாச்சு, வெடியை
கொளுத்தி போட்டுவிடலாமா?
கண்ணீரை துடைக்க…
1977 ஜூன் மாதம்
எம்ஜிஆர் ரேடியோவில் ஒரு பேட்டி கொடுத்தார்.
அண்ணாதுரை இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலைமை ஏற்பட்டதை
நினைத்து எண்ணி, எண்ணி கண்ணீர் வடித்தேன் என எம்ஜிஆர் கூறினார்.
அன்றைக்கு
அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம் தான் அதிமுக என சொன்னார். அதே
மாதிரி 2017, 2021ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தின் நிலைமையை யோசித்து
பார்த்த மக்கள், காமராஜர், அண்ணாதுரை, எம்ஜிஆர் அமர்ந்த இடத்தில்
இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலைமை ஏற்பட்டது என்று கண்ணீர் வடித்தார்கள்.
இன்றைக்கு கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம் தான் தமிழக வெற்றிக்கழகம்.
இப்படி எல்லாம் பேசுவதால் சில பேர் கொந்தளிப்பார்கள்.
பவள விழா பாப்பா
எம்ஜிஆர்
கட்சி ஆரம்பித்த போது, ஜெயித்த போது கூட சட்டசபையில் ஒரு நடிகர் கட்சி
வந்து இருக்கிறதாம், ஏதோ ஒரு புதிய கட்சி வந்து இருக்கிறது என கேலியும்,
கிண்டலும் செய்தனர். யார் அரசியலுக்கு வந்தாலும் கொந்தளிப்பது தான்
அவர்களுடைய வேலை.
அவர்கள் செய்யும் அட்ராசிட்டி பற்றி நாம் எடுத்து
சொன்னால், அவர்கள் செய்யும் ஊழல் குறித்து நாம் எடுத்து சொன்னால், 50
ஆண்டுக்கு முன் இருந்த அதே தகர டப்பாவை எடுத்து உருட்ட ஆரம்பித்து
விடுவார்கள்.
பவள விழா பாப்பாவுக்கு என்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும்? நாம் அவர்கள் செய்யும் தவறை சொல்லாமல் இருக்க முடியுமா? சொல்லுவோம்,
சொல்லிக்கொண்டே இருப்போம். அவர்களை கேள்வி
கேட்க நம்மை தவிர வேறு யாருக்கு தைரியம் இருக்கிறது?
திருக்குறள்
இன்றைக்கு
டிஜிட்டல் உலகத்தில் திருவள்ளுவர் இருந்திருத்தால் இந்த தீயசக்தி பற்றி
என்ன திருக்குறள் எழுதியிருப்பார்.
அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என எழுதியிருப்பார்.
மும்முனை போட்டி,
நான்கு முனை போட்டி என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும்
அப்படி இருக்கட்டும். மாபெரும் மக்கள் கூட்டணி சக்தியை கொண்ட நாம் ஒரு அணி
ஒருபக்கம், திமுக கூட்டணி ஒருபக்கம், பாஜ., கூட்டணி மற்றும் பலர். எத்தனை
சக்திகள் வந்தாலும் திமுகவை வீழ்த்த தவெகவால் மட்டும் தான் முடியும்.
இவ்வாறு விஜய் பேசினார்.
