சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தார். நடராஜர் கோவில் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சிதர் தலைமையிலான பொது தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அழைத்து வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

அங்கு சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை கவர்னர் தரிசனம் செய்தார். அப்பொழுது கோவில் பொது தீட்சதர்கள் கவர்னர் மற்றும் அவரது துணைவியாரிடம் சங்கல்பம் செய்து பிரசாதத்தை வழங்கினர்.
பின்னர் கோவில் வருகை பதிவேடு புத்தகத்தில் சாமி தரிசனம் செய்தது குறித்து பதிவிட்டு கையெழுத்திட்டார்.
