அரையிறுதியில் ரிபாகினா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு ஜெசிகா, ரிபாகினா முன்னேறினர்.

மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். இதில் ஸ்வியாடெக் 5-7, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-2, 7-6 என, சகவீராங்கனை அமண்டா அனிசிமோவாவை வீழ்த்தினார். அரையிறுதியில் சபலென்கா (பெலாரஸ்) – ஸ்விடோலினா (உக்ரைன்), ரிபாகினா (கஜகஸ்தான்) – பெகுலா (அமெரிக்கா) மோதுகின்றனர்.

அரையிறுதியில் சின்னர்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், ‘நடப்பு சாம்பியன்’ இத்தாலியின் ஜானிக் சின்னர், 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில், அமெரிக்காவின் பென் ஷெல்டனை வென்றார்.

மற்றொரு காலிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் லாரென்சோ முசெட்டி மோதினர். முதலிரண்டு செட்களை 6-4, 6-3 என கைப்பற்றிய முசெட்டி, 3வது செட்டில் 1-3 என பின்தங்கி இருந்த போது வலது காலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் ஜோகோவிச், ஜானிக் சின்னர் மோதுகின்றனர்.

Source link