திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தந்திரி ராஜீவரருக்கு

திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தந்திரி ராஜீவரருக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் கொள்ளை வழக்கில் முதல் எதிரியான உன்னி கிருஷ்ணன் போத்தியுடன் உள்ள தொடர்பின் அடிப்படையில் தந்திரி ராஜீவரரு கைது செய்யப்பட்டார்.

அவர் மீது நேர்மையற்ற சொத்து மோசடி, நம்பிக்கையான பதவியில் உள்ள ஒருவரால் குற்றவியல் நம்பிக்கை மோசடி, பொது ஆவணங்களை மோசடியாக உருவாக்குதல், மதிப்புமிக்க பாதுகாப்பை போலியாக உருவாக்குதல், குற்றவியல் சதி மற்றும் பொதுவான நோக்கம், ஊழல் தடுப்புச்சட்டம் 1988 பிரிவுகள் 13 (1) எ, 13 (2 ) சட்டப்பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்திரி ராஜீவரரு திருவனந்தபுரம் பூஜப்புரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜன.,10ல் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு நேற்று முன்தினம் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு இதயநோய் நிபுணர்கள் பரிசோதித்ததில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். இன்று ஆஞ்சியோ செய்யப்படும் நிலையில் மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான அறையில் ராஜீவரரு அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

Source link