மீண்டும் ஒரு போர்…. பற்றி எரியும் Iran – அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்

இன்று அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டு நாடுகளுமே ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் ஈரானின் உச்ச தலைவர்‌ காமேனியின் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதி, ஈரானின் தலைநகரான டெஹ்ரான், அணு ஆயுத பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கான காரணமாக இரு நாடுகளும் கூறுவது…

> ஈரானின் அணு ஆயுதங்கள்

> ஈரான் இரு நாட்டு மக்களுக்கும், அந்த அரசுகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பது போன்றவை தான்.

ஈரான்‌ மீதான தாக்குதல்
ஈரான்‌ மீதான தாக்குதல்

ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலின் பாதுகாப்புத் துறையும், அமெரிக்க அதிபர்‌ ட்ரம்பும் உறுதிபடுத்தியுள்ளனர்.

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலின் போது, காமேனி அவரது அலுவலகத்தில் இருந்தாரா என்கிற தகவல் இன்னும் தெரியவில்லை.

கடந்த ஆண்டு, ஜூன் மாதத்தில் ஈரான் மீதான தாக்குதலை முதலில் தொடங்கியது இஸ்ரேல். அதன் பின், அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

ஆனால், இன்றோ, அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டும் ஒன்றாக ஒரே நேரத்தில் களத்தில் இறங்கி ஈரானை தாக்கி வருகிறது.

இவர்கள் நோக்கம் ஒன்று தான் – ஈரான் அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும்.

ட்ரம்ப் பேச்சு

இந்தத் தாக்குதல் குறித்து ட்ரம்ப் பேசும்போது…

“தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் உலகின் நம்பர் ஒன் நாடு ஈரான்.

கடந்த 47 ஆண்டுகளாக, ஈரான் “அமெரிக்காவிற்கான மரணத்திற்காக கோஷமிட்டு வருகிறது.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கா படைகள் மீது ஈரானின் பிராக்ஸிக்கள் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

2023-ம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய போர் கூட ஈரானுடையது தான். ஹமாஸ் ஈரானின் பிராக்ஸிகள்.

அந்தத் தாக்குதலில் 46 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்” என்று கடுமையாக பேசியுள்ளார்.

ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீதும், அமெரிக்க படைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

Source link