பொதிகை மலையில் 'டிரக்கிங்', பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க மூன்று புதிய கோபுரங்கள் அமைக்கப்படும் என,

பொதிகை மலையில் ‘டிரக்கிங்’, பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க மூன்று புதிய கோபுரங்கள் அமைக்கப்படும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். இதெல்லாம் மத்திய அரசின் அறிவிப்பா? ஆட்சியை தாங்கி பிடிக்கும் பீஹாருக்கும், ஆந்தி ராவிற்கும் வாரி கொடுப்பர். தேர்தல் நேரத்தில் கூட தமிழகத்துக்கு அள்ளி கொடுக்க மனம் இல்லாமல், ‘டிரக்கிங், கோபுரம்’ என, வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்ற பார்க்கிறது, மத்திய பா.ஜ., அரசு.
தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெளிவாக தெரிந்தே, பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்துள்ளனர். பட்ஜெட் தாக்கல் செய்ததால், பங்கு சந்தைகள் ஞாயிற்று கிழமை செயல்பட்டன. பங்கு சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக, முதலீட்டாளர்களுக்கு, 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பெயிலியர் பட்ஜெட்டால் பலனே இல்லை என்பதை, பங்கு சந்தை பறைசாற்றி விட்டது.
-ரகுபதி, தமிழக அமைச்சர், தி.மு.க.,

Source link