அருணாச்சல பிரதேச கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிப்பு
அருணாச்சல பிரதேசத்தின் லோயர் சியாங் (( Lower Siang)) மாவட்டத்தில் மழையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு, யானைகள் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றது. அருணாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு மற்றும் கனமழை காரணமாக லோயர் சியாங் மாவட்டத்தில் உள்ள நாரி-கோயு ((Nari-Koyu)) பகுதியில், சாலைகளும் பாலங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை
செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்கும் Reliance Jio-வின் மெகா திட்டத்திற்கு, ஆயிரத்து 600 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் Starlink போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு போட்டியாக சொந்தமாக செயற்கைக்கோள் நெட்வொர்க் கட்டமைப்பை உருவாக்கும் Reliance Jio-வின் முயற்சியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹவுராவில் 15 வயதான துப்பாக்கி சுடும் வீராங்களை மாயம்

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில், 15 வயதான துப்பாக்கி சுடும் வீராங்கனை காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டில் இருந்து பொருட்களை வாங்குவதற்காக வெளியே சென்ற வீராங்கனை தமயந்தி சென், அதற்குப் பிறகு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. தமயந்தியின் பெற்றோர், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காததால் போலீசில் புகாரளித்துள்ளனர்.
