மாசாணி அம்மன் கோவில் பால்குட உற்சவம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள அளிந்திக்கோட்டை அருள்மிகு மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த ஜூலை 8-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன.

​விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள், சித்தி விநாயகர் மற்றும் பாலமுருகன் கோவிலில் இருந்து பூங்கரகம், பால்குடம், அக்னிச்சட்டி, பறவைக் காவடி மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் இறுதியாக மாசாணி அம்மன் கோவிலை அடைந்தது. பின்னர், அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்யப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

​இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றுச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Source link