ரெயில் பயணத்தில் போது உங்களுக்கு அல்லது உங்களுடன் வருபவருக்கோ அல்லது அருகில் இருப்பவருக்கோ ஏதாவது medical emergency ஏற்பட்டால் அதாவது, மாரடைப்பு, கடுமையான ரத்தப்போக்கு அல்லது சுயநினைவின்மை அல்லது பிரசவ வலி போன்ற உண்மையான அவசரநிலைகளின்போது எப்போது ‘அலாரம் செயின்’ (alarm chain) இழுக்க அனுமதிக்கப்படுகிறது.
ஆனாலும் சில சமயங்களில் ‘அலாரம் செயின்’ இழுப்பது medical emergencyஐ மேலும் மோசமாக்கும் என்பதால் அதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம் வாங்க…
எவ்வித பயணம் என்றாலும் அதில் சிலருக்கு உடல்நல பாதிப்புகளும் ஏற்படுவது உண்டு. நெடு நாட்களாக இருக்கும் உடல் உபாதைகளுக்கு அவரவர் கைகளில் மருந்துகளை எடுத்துச் சென்றாலும் ரெயிலில் செல்லும்போது திடீரென ஏற்படும் உடல் நல பாதிப்புகளுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் பயணிகள் விழிப்பதுண்டு.
நீங்க ரெயிலில் பயணம் மேற்கொள்ளும் போது திடீரென உங்களுக்கோ அல்லது உங்கள் அருகில் இருப்பவருக்கே medical emergency ஏற்பட்டால் உடனே பதற்றம் அடையாமல் (panic) முதலில் நீங்கள் டிக்கெட் பரிசோதகரை (TTE) அல்லது ரயில்வே ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்கவும்.
