உலகக் கோப்பை கால்பந்து தொடர்: வீரர்களை விமர்சித்து 70 லட்சம் பதிவுகள்

– நமது சிறப்பு நிருபர் –

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் போது, பல அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகளை விமர்சித்து 70 லட்சம் பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் போது வீரர்கள்,பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகளை ஆன்லைன் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க சமூக வலைதள பாதுகாப்பு சேவையை பிபா அமைப்பு ஏற்பாடு செய்தது.

இந்த அமைப்பு சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வந்தது. அதில், இடையூறு ஏற்படுத்தும் அல்லது மோசமாக விமர்சித்தும் சமூக வலைதளங்களில் 70 லட்சம் பதிவுகள் பதிவிடப்பட்டதை கண்டுபிடிக்கப்பட்டது.இது 2022ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரை விட 14 மடங்கு அதிகம்.

வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விமர்சித்து 5 லட்சம் பதிவுகள் இருந்ததை ஏஐ வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டது. சட்ட அமலாக்கம் உள்ளிட்ட அதிகாரிகளை மிரட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட அச்சுறுத்தல்கள் வந்தன. மேலும், உலகக்கோப்பை துவங்கியது முதல் மொத்தமாக வந்த பதிவுகளில் 53 லட்சம் பதிவுகள் திருத்தம் செய்யப்பட்டன.

Source link