'வள்ளல்' எம்பாப்வே

பாரிஸ்: பிரான்சின் எம்பாப்வே, தனக்கு கிடைக்கும் சம்பளம், போனஸ் தொகையை சேவை பணிகளுக்கு வாரி வழங்கி வருகிறார்.

பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்வே 27. முன்கள வீரரான இவர், 2017 முதல் பிரான்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 106 போட்டியில் (66 கோல்) விளையாடி உள்ளார். மூன்றாவது முறையாக (2018, 2022, 2026) உலக கோப்பையில் விளையாடிய எம்பாப்வே, 22 போட்டியில், 22 கோல் பதிவு செய்துள்ளார். இம்முறை கேப்டனாக களமிறங்கிய இவர், 8 போட்டியில், 10 கோல் அடித்துள்ளார்.

கோல் அடிப்பதில் வல்லவரான எம்பாப்வே, மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ‘கொடை வள்ளலாக’ திகழ்கிறார். கடந்த 2017 முதல், பிரான்ஸ் அணிக்காக விளையாடும் போது கிடைக்கும் சம்பளம், பரிசுத்தொகை, போனஸ் தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார். கடந்த 2018ல் பிரான்ஸ் அணி உலக கோப்பை வென்ற போது கிடைத்த முழுபரிசுத் தொகையை, பாரிசில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி செய்யும் ‘பிரிமியர்ஸ் டி கோர்டீ’ என்ற தொண்டு நிறுவனம் ஒன்றிக்கு நன்கொடையாக அளித்தார். தவிர எம்பாப்வேயின் வருமானத்தில் 30% நேரடியாக அவரது சொந்த தொண்டு நிறுவனமான ‘ஐ.பி.கே.எம்.,’ அறக்கட்டளைக்கு செல்கிறது. இந்த அறக்கட்டளை சார்பில் கல்வி, வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்குகிறது.

Source link