குறிப்பாக, நகர்ப்புறங்களில் வசிக்கும் இளைஞர்கள் இந்த செயலியை அதிகம் பயன்படுத்தி வந்தனர். இரவு, பகல் என எந்நேரமும் தங்களுக்குத் தகுந்தாற் போல் பேசும் இந்த செயலியைப் பலரும் நிஜ துணையாகவே (காதலர்) கருதுகின்றனர்.
இந்த செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்கள், அதனுடன் உணர்வுப் பூர்வமாகத் தொடர்பு கொண்டுள்ளனர். இதனைத் தடுக்கும் பொருட்டு, அந்நாட்டில் புதிய தேசிய விதிமுறைகள் புதன்கிழமை அன்று அமலுக்கு வந்தது. இதையடுத்து, ஏஐ மூலம் இயங்கும் ‘துணை பாட்’ சேவைகளைப் பயன்படுத்தும் சீனர்கள் தங்களின் துணையாகக் கருதிய ஏஐ செயலிகளுக்கு விடை கொடுத்துள்ளனர்.
இதுவரை தங்களின் துணையாக இருந்துவந்த ஏஐ செயலி முடக்கப்பட்டதால், இந்த பிரிவைத் தாங்காமல் அந்த இளைஞர்கள், ”எனது காதலன்/காதலி இறந்துவிட்டால். இனிமேல் அவரது குரலைக் கேட்க முடியாது” என உருக்கமாகப் பதிவிட்டு துக்கம் அனுசரித்து வருகின்றனர்.
இதனிடையே, இளைஞர்கள் இது போன்று ஏஐ செயலிகளுடன் உணர்வுப்பூர்வமாக நட்பு கொண்டுவருவது. எதிர் காலத்தில் பெரும் ஆபத்தை விளைவிக்கும். மேலும், சக மனிதர்களுக்கிடையிலான உறவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
