அதேசமயம், நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் நேற்று கூடிய நிலையில், திட்டமிட்டபடி நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணி சென்றவர்கள் மீது டெல்லி காவல்துறையும், பாதுகாப்புப் படையினரும் கடுமையான தடியடி நடத்தினர். அதேபோல், போராட்டக்காரர்களும் காவல்துறை மீது தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று அவை தொடங்கிய முதல் நாளில், சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கங்கள் மற்றும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் சென்றிருந்த கங்கனா ரனாவத், அங்கு சிஜேபி போராட்டம் குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்ததோடு, அதனை விமர்சித்தும் பேசினார்.
