நாடாளுமன்றத்தை 2வது நாளாக முற்றுகையிடத் திட்டம்?

கல்வித் துறையில் நிலவும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். கல்வித்துறையில் விரிவான சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்று கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தை நோக்கி நேற்று (20.07.2026) பேரணியாகச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீச்சு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. 

இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை அக்கட்சியின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். உயர்கல்வி மட்டுமின்றி கல்வித்துறையின் அனைத்து முக்கிய அம்சங்களிலும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிவு பிரச்சினைகளால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தினர். 

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக இன்றும் (21.07.2026) நாடாளுமன்றத்தை முற்றுகையிடக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக இன்று காலை முதல் மேலும் பல ஆதரவாளர்கள் அங்குத் திரண்டு வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையில் ஆதரவாளர்கள் திரண்ட பிறகு, நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இரவு ஜந்தர் மந்தர் பகுதியில், கேரளா ஹவுஸ் நுழைவாயில் அருகே போராட்டக்காரர்கள் முகாமிட்டுத் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதே சமயம் டெல்லியில் நேற்று நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என டெல்லி காவல்துறை தகவல்  தெரிவித்துள்ளது. 

Source link