CM Vijay News Live Updates: தேசிய தலைவராக உருவெடுப்பார் முதல்வர் விஜய்; இந்தியா தலைமையை எதிர்நோக்குகிறது

சென்னை இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு நேரில் சென்று அதிரடி கள ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது, திடக்கழிவுகளில் இருந்து மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார். சென்னையில் சேகரிக்கப்படும் கழிவுகளைக் கொண்டு எவ்வாறு எரிவாயு தயாரிக்கப்படுகிறது, இந்த மையத்தின் தினசரி உற்பத்தித் திறன் எவ்வளவு, மற்றும் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த என்னென்ன நவீன தொழில்நுட்பங்கள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.

இயற்கை எரிவாயு மையத்தில் விஜய் ஆய்வு

சென்னை சேத்பட்டு பகுதியில் உள்ள இயற்கை எரிவாயு மையத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் விஜய் வருகையையொட்டி சாலை முழுவதும் பொதுமக்கள் நின்று வரவேற்பு அளித்தனர்.

“விஜய் காலடியில் வைகோ விழுந்து கிடக்கிறார்” – நாஞ்சில் சம்பத் பேச்சு

விழுப்புரத்தில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில், “ஆட்சி மாற்றமும் ஒரு அரசியல் மாற்றமும் வேண்டும் என்பது தமிழக மக்களின் கனவு. 1994 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி ஒரு அரசியல் மாற்றத்திற்கு அகரம் எழுதினார் வைகோ. ஆனால் அவராலேயே அதை செய்ய முடியவில்லை.

இன்று அவரே எங்கள் தலைவர் விஜய்யின் காலடியில் விழுந்து கிடக்கிறார். ஒரு அரசியல் மாற்றத்தை செய்வதற்காகத்தான் மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கினார். ஆனால் இன்று அந்த கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அந்த கட்சி பாஜகவுடன் இணைந்ததால் தற்போது கல்லறைக்குள் போய்விட்டது.

அது போல் கமல்ஹாசன், திமுகவின் மீது வெறுப்பை கக்கி, டிவியை உடைத்து மக்கள் நீதி மய்யத்தை தொடங்கினார். இப்போது அந்த கமல் எம்எல்ஏவாக கூட முடியாமல் அவர் கையில் இருந்த டார்ச்லைட்டை அறிவாலயத்தின் திண்ணையில் தேடி கொண்டிருக்கிறார்” நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • Jul 21, 2026 10:17 IST

    “விஜய் சார் சீக்கிரம் வாங்க” – குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக மக்கள் சாலை மறியல்

    குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறிய மக்கள், உடனடியாக பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், “விஜய் சார் சீக்கிரம் வாங்க” என்று முழக்கமிட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதுடன், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

  • Jul 21, 2026 10:13 IST

    தேசிய தலைவராக உருவெடுப்பார் முதல்வர் விஜய்; இந்தியா தலைமையை எதிர்நோக்குகிறது – கோபிசன்

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தைப் போலவே நாடு முழுவதும் மாற்றம் தேவை என்றும், அந்த மாற்றத்தை முன்னெடுக்கும் தலைமைத்துவம் தலைவர் விஜயிடம் இருப்பதாகவும் தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ கோபிசன் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜயின் தலைமையை இந்தியா முழுவதும் எதிர்நோக்கி இருப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் மக்கள் அளித்த ஆதரவு விரைவில் தேசிய அளவிலும் பிரதிபலிக்கும் என்றும், விஜய் விரைவில் தேசிய தலைவராக உருவெடுப்பார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

Source link