தனுஷ் கட்சி தொடங்குகிறாரா? கஸ்தூரி ராஜா பதிலடி!

கடந்த வாரம் 72 வது தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், இந்திய அளவிலான பலவேறு மொழிகளில் வெளியான சிறந்த படங்கள், நடிகர்கள் மாற்றுத் தொழில்நுட்ப கலைஞர்கள் என பல்வேறு தரப்பினருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில், நடிகர் தனுஷ் இந்த ஆண்டு இரண்டு தேசிய விருதுகளை வென்றிருந்தார்.    

அவர் இயக்கி நடித்திருந்த ’ராயன்’ படத்திற்குச் சிறந்த படத்திற்கான தேசிய விருதும், அதே போல அவர் நடித்த கேப்டன் மில்லர் படத்திற்கு சிறந்த நடிகருக்கான (சிறப்பு விருது) விருதும் கிடைத்துள்ளன. இதனிடையே, தனுஷிற்கு விருது வழங்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்துப் பிரபல தனியார் தொலைகாட்சியில் பேசிய தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா,  ” தனுஷிற்கு இந்த விருது முதல் முறை அல்ல. அவர் ஏற்கனவே, ஆடுகளம், அசுரன் போன்ற படங்களுக்கும் விருது வாங்கியிருக்கிறார். விருது என்பது அரசு மற்றும் தேர்வுக் குழுவின் முடிவாகும். அதே நேரத்தில் செல்வாக்கானவர்களை சந்தித்து எனக்கு விருது கொடுங்கள் என்று கேட்கும் அளவிற்கான நபர் தனுஷ் கிடையாது. அதே நேரத்தில், அவர் விருதுக்காக ஏங்கும் ஆள் கிடையாது.  

அதே போல, அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறாரா? என்பது எனக்குத் தெரியாது. அவர் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தால் ஆரம்பித்துவிட்டுப் போகட்டும். இல்லை என்றால் விட்டுவிடட்டும். அதனால், என்ன ஆகப் போகிறது. அவர் கட்சி ஆரம்பித்தால் எதாவது மாறிவிடப்போகிறதா? இல்லை என்றால் எதுவும் நடக்காமல் இருந்துவிட போகிறதா? அதனால், அது பற்றி எங்களுக்கு எந்த கருத்தும் இல்லை” என்று தெரிவித்தார். 

Source link