ரிலீஸுக்கு முன்பே ரூ.15 கோடி வசூல்… லியோ, கோட் சாதனையை தகர்க்குமா ஜன நாயகன்?

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 23-ஆம் தேதி வெளியாக உள்ளது. இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம், விஜயின் கடைசி படமாக வெளியாவதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ‘தளபதி’ காய்ச்சல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

ரீலீஸ்க்கு முன்பே ரூ.15 கோடி வசூல்

படம் வெளியாக இன்னும் 48 மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கும் நிலையில், ‘ஜன நாயகன்’ முதல் நாள் முன்பதிவு வசூலில் ரூ.15.09 கோடியை கடந்துள்ளது. தொழில்துறை கண்காணிப்பு நிறுவனமான சாக்னிக் (Sacnilk) வெளியிட்ட தகவலின்படி, ஜூலை 21 காலை 9 மணி நிலவரப்படி இந்த வசூல் பதிவாகியுள்ளது. தமிழ் பதிப்புக்கான டிக்கெட் முன்பதிவே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 4,17,636 டிக்கெட்டுகள் விற்பனையாகி, 5,091 காட்சிகளுக்கு ரூ.10.22 கோடி வசூலாகியுள்ளது. தெலுங்கு பதிப்பு ரூ.12.02 லட்சமும், இந்தி பதிப்பு ரூ.29 ஆயிரமும் மட்டுமே வசூலித்துள்ளது.

அதிக வசூல் கொடுத்த மாநிலங்கள்

‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடு – ரூ.6.74 கோடி, கர்நாடகா – ரூ.4.88 கோடி , கேரளா – ரூ.1.80 கோடி என இந்த மூன்று மாநிலங்களிலிருந்தே பெரும்பாலான முன்பதிவு வசூல் கிடைத்துள்ளது.

‘லியோ’, ‘கோட்’ படங்களை விட பின்தங்கியுள்ளதா?

முன்பதிவு விற்பனை வலுவாக இருந்தாலும், விஜயின் முந்தைய இரண்டு படங்களான ‘லியோ’ மற்றும் ‘கோட்’ ஆகியவற்றின் சாதனையை தற்போது வரை ‘ஜன நாயகன்’ எட்டவில்லை. ‘கோட்’ (2024) – இந்தியாவில் முதல் நாள் முன்பதிவு ரூ.29.83 கோடி; உலகளவில் முதல் நாள் வசூல் ரூ.126.32 கோடி. ‘லியோ’ (2023) – முதல் நாள் முன்பதிவு ரூ.46.36 கோடி உலகளவில் முதல் நாள் வசூல் ரூ.148.5 கோடி. இதனால், ‘ஜன நாயகன்’ தற்போது அந்த இரு படங்களின் முன்பதிவு வசூலை விட பின்தங்கியுள்ளது. இருப்பினும், கடைசி நேர டிக்கெட் முன்பதிவுகள் அதிகரித்தால் வசூல் கணிசமாக உயர வாய்ப்புள்ளது என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாள் இந்திய வசூல் எவ்வளவு?

தற்போதைய முன்பதிவு வேகத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘ஜன நாயகன்’ இந்தியாவில் முதல் நாளில் ரூ.50 முதல் ரூ.60 கோடி வரை வசூலிக்கக்கூடும் என சாக்னிக் கணித்துள்ளது. வெளியீட்டு நாளில் ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்து இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.

‘கூலி’ சாதனையை முறியடிக்குமா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.151 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. அந்த சாதனையை ‘ஜன நாயகன்’ முறியடிக்குமா என்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

நட்சத்திர பட்டாளம்

‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படம், விஜயின் திரைப்பயணத்திற்கு சிறப்பான நிறைவாக அமையுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Source link