வெஜ் சாப்டா தான் இந்த நாட்டுல உங்களுக்கு என்ட்ரி: வீகன் தலைநகரம்; இந்த பாஸ்தா டெஸ்டினேஷன் பற்றி தெரியுமா?

சைவ பிரியர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது எப்போதும் ஒரு பெரிய சவாலாகவே இருக்கும். அங்கே நமக்குச் சாப்பிட ஏதாச்சும் கிடைக்குமா? என்ற பயத்திலேயே பலரும் தங்களது வெளிநாட்டுப் பயணத் திட்டங்களைக் கைவிட்டு விடுவார்கள். ஆனால், அசைவ உணவுகள் ஆதிக்கம் செலுத்தும் உலக நாடுகளுக்கு மத்தியில், சைவ உணவுகளையே தங்களது கலாச்சாரத்தின் அங்கமாகக் கொண்டு கொண்டாடும் சில விசித்திரமான மற்றும் அழகான சுற்றுலாத் தலங்களும் உள்ளன. அவை குறித்து பார்க்கலாம்.

விலங்கு கழிவுல காஃபியா? விலைய கேட்டா கிறுகிறுனு ஆய்ருவீங்க; இந்தியாலயும் கிடைக்குதாம்

இந்தியா 

இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாரம்பரியமாகவே சைவ உணவுகள் நிறைந்துள்ளன என்பது நமக்குத் தெரியும். ஆனால், ‘இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அசைவம் மட்டும்தான் கிடைக்கும்’ என்றொரு தவறான பிம்பம் உள்ளது. அது  உண்மை அல்ல. அங்குள்ள இயற்கை விவசாயக் கலாச்சாரத்தால்  ரசாயனமற்ற பல விசித்திரமான காய்கறிகள் கிடைக்கின்றன. சமைக்கும் முறை சற்று மாறுபட்டாலும், ஏராளமான சுவையான சைவ உணவுகள் அங்குக் கிடைக்கின்றன.

 இத்தாலி 

இத்தாலிய சமையல் முறை இயல்பாகவே சைவ பிரியர்களுக்கு மிகவும் உகந்தது, குறிப்பாக இத்தாலியின் வடபகுதியில் பாஸ்தா, ரிசோட்டோ, பீட்சா மற்றும் ஃப்ரெஷ் சாலட்கள் அங்கு மிகவும் பிரபலம். ஆலிவ் எண்ணெய், சீசனல் காய்கறிகள், மொஸரெல்லா மற்றும் ரிகோட்டா சீஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி கறி இல்லாமலேயே அசுர சுவையில் உணவுகளைத் தயாரிப்பார்கள். சிறிய உணவகங்களில் கூட சைவ உணவுகள் எளிதாகக் கிடைக்கும்.

தாய்லாந்து 

சோசியல் மீடியாவில் தாய்லாந்து நைட்கேம் மார்க்கெட்களைப் பார்த்துவிட்டு, ‘அய்யோ அங்கு வெஜிடேரியனுக்கு இடமே இல்லை’ என்று நினைத்துவிடாதீர்கள். தாய்லாந்து உணவுகள் இனிப்பு, புளிப்பு, காரம் மற்றும் துவர்க்கும் சுவைகளின் கலவையாக இருக்கும். பாட் தாய் (Pad Thai), டோஃபு சேர்த்த கிரீன் கரி, காய்கறி ஸ்டிர் ஃப்ரை மற்றும் ‘மேங்கோ ஸ்டிக்கி ரைஸ்’ (Mango Sticky Rice) போன்றவை சைவப் பிரியர்களின் ஃபேவரிட். பாங்காக் மற்றும் சியாங் மாய் நகரங்களின் ஸ்ட்ரீட் ஃபுட்களில் சைவ ஆப்ஷன்கள் அள்ளுகின்றன.

இஸ்ரேல் – டெல் அவீவ் 

இஸ்ரேலின் ‘டெல் அவீவ்’ நகரம் உலகளாவிய ‘வீகன் தலைநகரம்’ என்று அழைக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், மத்திய தரைக்கடல் சுவைகள் நிறைந்த இங்கு ஹம்முஸ், ஃபலாஃபெல், வெஜ் ஷக்ஷூகா, தபூலே மற்றும் ஃப்ரெஷ் சாலட்கள் சைவப் பிரியர்களைச் சுண்டி இழுக்கின்றன. காய்கறிகள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதச்சத்து உணவுகள் இங்கு ஏராளமாகக் கிடைக்கின்றன.

Source link