காதல் இருப்பது ஓகே தான்… ஓவரா அன்ப பொழிந்தால் ஜெயில்ல தான் இருக்கணும்; விசித்திர சட்டம் உள்ள நாடுகள்

சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அந்தந்த நாடுகளின் கலாச்சாரம் மற்றும் சட்ட திட்டங்களைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக, பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்துவது, அதாவது முத்தமிடுவது, கட்டிப்பிடிப்பது போன்றவை சில நாடுகளில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.

கனடாவில் கை நிறைய சம்பளம்… ஆனாலும் வேலையை உதறிய இந்தியர்; தாயகம் திரும்பியது ஏன் தெரியுமா?

சில நாடுகளில் இது வெறும் சமூகக் கண்டிப்போடு நிற்கும்; ஆனால் சில நாடுகளில் அபராதம், சிறை தண்டனை மற்றும் கசையடி வரை கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். குறிப்பாக திருமணம் ஆகாதவர்களுக்கும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் ஆபத்து அதிகம். வெளிநாடு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாடுகள் குறித்து பார்க்கலாம்.

ஐக்கிய அரபு அமீரகம் 

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது இடங்களில் முத்தமிடுவதோ அல்லது கட்டிப்பிடிப்பதோ பொது கண்ணியச் சட்டங்களை மீறும் குற்றமாகும். இதற்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படலாம். கைய பிடித்து நடப்பது சில இடங்களில் அனுமதிக்கப்பட்டாலும், திருமணத்திற்குப் புறம்பான தம்பதிகளுக்கும் ஒரே பாலின தம்பதிகளுக்கும் சட்ட அமலாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்.

பாகிஸ்தான் 

பாகிஸ்தானில் கைகளைப் பிடிப்பதையோ அல்லது முத்தமிடுவதையோ நேரடியாகத் தடை செய்ய தனிச்சட்டங்கள் இல்லை என்றாலும், அவை பொது இடங்களில் “ஆபாசமான செயல்கள்” என்ற பொதுவான சட்டப் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகப் பார்க்கப்படுகின்றன. 

தாய்லாந்து

தாய்லாந்தில் சட்டப்பூர்வமான கடுமையான தடைகள் எதுவும் இல்லை என்றாலும், ரிசார்ட்டுகள் மற்றும் தனிப்பட்ட இடங்களைத் தவிர்த்து வெளிப்படையான இடங்களில் அன்பை வெளிப்படுத்துவது சமூக ரீதியாகத் தவறாகவே பார்க்கப்படுகிறது. பாரம்பரியமிக்க இடங்களில் உள்ளூர் அதிகாரிகளோ அல்லது மக்களோ இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது.

எகிப்து 

எகிப்தில் அளவுக்கு அதிகமான பாச வெளிப்பாடு அல்லது பொது ஒழுக்கத்திற்கு மாறான நடத்தைகளுக்காகத் தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது கண்ணியம் அல்லது ஒழுக்க நெறிமுறைகளின் அடிப்படையில் அபராதம் முதல் கைது வரை தண்டனைகள் மாறுபடலாம்.

துனிசியா 

துனிசியாவில் திருமணமாகாத தம்பதிகள் பொது இடங்களில் முத்தமிடுவதோ அல்லது நெருக்கமாக இருப்பதோ பொது கண்ணியச் சட்டங்களின் கீழ் குற்றமாகும். உள்ளூர் அதிகாரிகளின் அமலாக்கத்தைப் பொறுத்து அபராதம் அல்லது குறுகிய காலச் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

இந்தியா

இந்தியாவில் முற்றிலும் தடை செய்ய நாடு தழுவிய தனிச்சட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் முந்தைய இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், பொது இடத்தில் ஆபாசமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, இந்தியாவில் பொது இடங்களில் முத்தமிடுவது மற்றும் நெருக்கமாகக் கட்டிப்பிடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

Source link