''ஜன நாயகன்' லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை?' – அ. வினோத் அளித்த பதில் என்ன?

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜன நாயகன்’ படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

“சென்சாரில் பல விஷயங்கள் நடந்துள்ளன. ஆனால், ஆதாரம் இல்லாததால் வெளிப்படையாகப் பேச முடியவில்லை. அரசியல் லாபத்துக்காக எங்கள் மீது பழி போட்டார்கள். படத்துக்குப் பிரச்னை வரும், தயாரிப்பாளரும், ஹீரோவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தார்கள்” என்றிருக்கிறார்.

ஜனநாயகன்
ஜனநாயகன்

தொடர்ந்து ‘ஜன நாயகன்’ லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த அ. வினோத், “இப்போ இது பெரிய பிரச்னையா? நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறது.

இதற்கு ஏன் விஜய் ட்வீட் போட்டுக்கொண்டு இருக்கிறார் எனப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அதனால், இது ஒரு சட்டப் பிரச்னை. அது தொடர்பான முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link