இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவாகப் பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ஒருவர் செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நேற்று (20-07-26) மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈட்டுப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பசியைப் போக்க உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் போராட்டக்களத்திற்கு வந்தார். அவர் தான் கொண்டுவந்திருந்த அதிக அளவிலான உணவு பொட்டலங்களை அங்கிருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”மாஹாராஷ்ட்ரா மாநிலம், மும்பையில் இருக்கும் அனுஜ் ராவ்த் என்பவர் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் பசியோடு இருப்பவர்களுக்கு இந்த உணவை வழங்கி விடுங்கள் என்று கூறினார். இதற்கான பணத்தை அவர் ஏற்கனவே செலுத்திவிட்டார்” என்று கூறினார், இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உணவு பொட்டலங்களைப் பெற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள், அனுஜ் ராவத் மற்றும் உணவு டெலிவரி ஊழியர் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இது சம்பந்தமான வீடியோ சமுக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இது குறித்து போராட்டக்காரர்கள் கூறும் போது, தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. போராட்டத்திற்கு வர இயலாதவர்கள், வெளியூர்களில் இருப்பவர்கள் கூட தங்களால் ஆன ஆதரவை நல்கி வருகின்றனர். அவர்கள் போராட்ட களத்தில் இருப்பவர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார்கள். தினமும் இணையதளத்தின் மூலமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு பொட்டலங்களை டெலிவரி ஊழியர்கள் போராட்டக்காரர்களுக்கு வழங்கி வருகிறார்கள். இந்த உணவுகளை எங்கிருந்தோ ஆர்டர் செய்து போராட்டக்காரர்களுக்குத் தருமாறு அவர்கள் ஊழியர்களிடம் கூறுகின்றனர். அந்த வகையில், உணவு, தேநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பொருட்கள் கிடைக்கப்பெறுகின்றன” எனத் தெரிவித்துள்ளனர். இது, மாணவர்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் பெரிய அளவிலான ஆதரவு இருப்பதையே காட்டுவதாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
