அன்னாசி
கடந்த வாரம் : ரூ.32.00
தற்போது : ரூ.36.00
வரத்து குறைவாக உள்ளது. பழுத்த பழம் 36 ரூபாய்க்கும், பச்சை 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தேவை அதிகரித்தால் விலை உயரும். இல்லையேல் இதே விலைதொடரவே வாய்ப்புள்ளது.
சந்தை
வாழக்குளம், கேரளம்
பச்சை பட்டாணி
கடந்த வாரம் ரூ.53.00
தற்போது : ரூ.52.00
வரத்து சீராக உள்ளது. தேவை அதிகரிக்காததால் விலை உயரவில்லை. இன்னும் சில வாரங்களுக்கு சிறிய ஏற்ற இறக்கத்துடன் இதே விலை தொடரக்கூடும்.
சந்தை
கொத்தவால் சாவடி, சென்னை
சென்னா (வெள்ளை)
கடந்த வாரம் : ரூ.120.00
தற்போது : ரூ.120.00
பிரேசில் நாட்டிலிருந்து சென்னா வருகிறது. விலையில் மாற்றமில்லை. தரத்தை பொறுத்து 90 முதல் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதே விலை தொடரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
சந்தை
கொத்தவால் சாவடி, சென்னை
